வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் உள்ளன என்றால் அது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சென்ற முப்பதாண்டுக் காலத்தில் யார் வளர்ச்சி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி எது வளர்ச்சி பெற்றது என்ற வினாவுக்கும் விடை காண வேண்டும். கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டது. கல்விமுறையானது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல் நிலையங்கள், சோதனைக் கூடங்கள், விளையாட்டரங்கங்கள், பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், தேர்வுகள், பட்டங்கள் போன்ற அமைப்பு அம்சங்களின் தொகுப்பாகும்.
Be the first to rate this book.