பொருளாதாரம் குறித்து ஜெ. ஜெயரஞ்சன் மின்னம்பலத்தில் எழுதிய கட்டுரைகள், மோடி அறிவித்த பண மதிப்பழிப்பு பிரச்னையால் ஏற்பட்ட சூழலில் மிக முக்கியமான விவாதங்களை ஏற்படுத்தின. இப்போது அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘ஜெ.ஜெயரஞ்சன் கட்டுரைகள் - இந்திய பொருளாதார மாற்றங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் வந்துள்ள மாற்றங்களையும், சாதக பாதகங்களையும் அறிந்துகொள்ள இந்த நூல் உதவும். புத்தகத்தின் ஆசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை உருவாக்கி இயக்குநராக பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.
Be the first to rate this book.