இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளாக்கிக் கொள்கிறது. இந்து முஸ்லீம் பிரச்சினையை இந்தியப் பிரிவினையின் தடத்தில் தேடிச் செல்லும் படங்கள் குறித்த விரிவான பார்வைகளை முன்வைக்கிறது இந்த நூல். கரம் ஹவா, எர்த் மம்மோ, தமஸ், டிரெயின் டு பாகிஸ்தான், காமோஸி பாணி, ஹேராம் எனப் பல்வேறு படங்களில் வெளிப்படும் பிரிவினையின் ஆதாரமான துயரங்களையும் அழிவையும் பரிசீலிக்கும் யமுனா ராஜேந்திரன் சினிமாவில் அடிப்படைவாத அரசியல் செயல்படும் விதத்தையும் விவாதிக்கிறார்.
Be the first to rate this book.