இந்தியப் பெரு முதலாளிகளின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்யும் தோழர் சுனிதிகுமார் கோஷ், காலனியாட்சிக்கு முந்தைய பிந்தைய இந்தியச் சமூகம் குறித்து ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார். வெள்ளையர்களின் வருகைக்கு முன்பு இந்திய நாடு தேங்கிப்போன, பின்னடைந்த சமூகமாக இருந்தது. முன்னேற்றத்திற்கான எந்தவொரு வாய்ப்புமின்றி உயிர்ப்பற்றுக்கிடந்தது என்ற கட்டுக்கதையைத் தக்க ஆதாரங்கள் மூலம் இந்நூல் உடைத்தெறிகிறது. காலனியாட்சியின்போது இந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட சமூக அரசியல்-பொருளாதாரப் பாதிப்புகளையும் மாற்றங்களையும் விரிவாக விவாதிக்கிறது,
மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் தோன்றிய முதலாளி வர்க்கம், அந்தந்த நாடுகளில் நிலக்கிழமையின் பழைமைவாதத்தை எதிர்த்துப் போராடி, அச்சமூகங்களை நவீனப்படுத்தியதுபோல இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தால் ஏன் செய்ய முடியவில்லை என்பதை வரலாற்று ஆதாரங்களோடு இந்நூல் அலசுகிறது; மக்களின் வறுமைக்கும், சொல்லொண்ணா வேதனைகளுக்கும் காரணமாகவுள்ள இச்சமூக அமைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, வெகுமக்களுக்கான புதிய இந்தியாவை நிர்மாணிப்பதற்கான பாதையையும் இது சுட்டிக்காட்டுகிறது.
Be the first to rate this book.