தமிழ்ப்பழங்குடிப் பண்பாடு, தன்னிலிருந்து கிளைத்து வளர்ந்துவிட்ட சமவெளித் தமிழ்ப் பண்பாட்டோடு இணைதல் என்பது வரலாற்றுப் போக்கில் நிகழக்கூடிய ஒன்றுதான். மாறிவரும் சமூகச் சூழலில் அதுதான் வரலாற்று விதியாகவும்கூட இருக்க முடியும்.ஆனால் பழங்குடிப் பண்பாட்டைத் தன்னுடன் இணைத்துச் சுவீகரித்துக் கொள்ள விரும்பும் தமிழ்ப் பண்பாடு என்பது தனது தனித்த அடையாளங்களொடு இருக்கிறதா என்பது மிகப்பெரும் வினாவாகும். அதாவது, தமிழ்ப் பண்பாடு என்று இன்று கருதப்படும் பண்பாடு, உண்மையில் சமற்கிருத மயமாக்கப்பட்ட பண்பாடே உலக வல்லாதிக்கத்தின் ஒரு பகுதிக்கு ஆட்பட்ட பண்பாடே.
- கி. பார்த்திபராஜா
Be the first to rate this book.