சௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு என்று அறிந்தேன். குஜராத்திகளும் கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும் கூட தமிழருக்கும் தெலுங்கருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, அவ்வளவு வித்தியாசம் அவர்களிடையே. கோவானியப் பெண்கள் நல்ல தேகக்கட்டுடையவர்கள். அவர்களில் சிலர் சுருட்டுப் பிடிப்பார்கள். பாதிபிடித்த சுருட்டை அணைத்துவிட்டு, அதைக் கூந்தலில் செருகிக் கொள்வார்கள். நமது நாட்டில் பூ வைத்துக் கொள்வது போல கூந்தலில் அவர்கள் சுருட்டு வைத்துக் கொள்வார்கள்! கோவாவிலுள்ள ரயில் நிலையங்களில் சாமான் தூக்கும் கூலிகளில் பெரும்பாலோர் பெண்களே.
Be the first to rate this book.