இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள்.
கள்ளிக்கோட்டையிலிருந்து விடுதலையாகி கொச்சி, சென்னை நகரங்களில் தங்கியிருந்துவிட்டு இறுதியாக கல்கத்தாவுக்குச் சென்று தன் கணவருடனான மணஉறவை விலக்கிக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார் எலிஸா. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் இங்கிலாந்திலிருந்து தனது கணவருடன் எலிஸா மேற்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலான சாகசமிக்க கடற்பயண அனுபவக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல்.
Be the first to rate this book.