ஈரானில் ஒரு சுற்றுலாப் பயணி போலப் பயணம் செய்யும் ஓர் இந்திய நிருபர், தனது நேரடி அனுபவங்களை டைரியில் ரகசியக் குறிப்புகளாக எழுதி வைக்கிறார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2017ம் ஆண்டு வாக்கில் நெருக்கடியான சூழல் நிலவிய காலகட்டத்தில், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலையில், ஈரானின் சர்வதேச அரசியல் சூழலை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ஈரான் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, அங்கிருக்கும் மக்களிடம் அந்த நாட்டின் சூழல் பற்றிக் கேட்கிறார் ஆசிரியர். டெஹரான், ஷிராஸ், இஸ்பஹான், பெர்ஸபோலிஸ், பண்டர் அப்பாஸ், இன்னும் பல இடங்களுக்குச் சென்று, அந்த இடங்களைப் பல படங்கள் எடுத்து இருக்கிறார். அவையும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தில் கச்சா எண்ணெய் அரசியலைப் பற்றிய நேரடி அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் நிகழும் பல சிக்கல்களையும் அதனால் நடக்கப் போகும் நேர் மற்றும் எதிர்மறையான நிகழ்வுகளைப் பற்றியும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். அனைவரும் வாசிக்கும்படியான இலகுவான நடையில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
Be the first to rate this book.