இஸ்லாத்தைப் பொருத்தவரை திருமணம், வாரிசுரிமை, வக்ஃபு சொத்துக்கள், பாகப்பிரிவினை போன்றவற்றில் மட்டுமே இஸ்லாமியம் சார்ந்த ஷரியத் சட்டத்தை பின்பற்றக்கூடிய தனியார் சட்டங்கள் பிரத்தியேகமாக அவர்களுக்கென வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அத்தனை குற்றவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்த அத்தனை அம்சங்களுக்கும் இந்தியத் திருநாட்டின் பொதுவான அரசியல் சட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும். அது தான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்குள்ளாக, அதைச் சார்ந்த வாழ்வு முறைகளில் மட்டுமே பிற சமயத்தினரை அது பாதிக்காது என்பதாலும் அது பொதுவாக மற்றைய தளங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் மட்டுமே அந்த உரிமை இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தலாக், விவாகரத்து என்ற முறையில் சில சிக்கல்களை மக்கள் அறியாமல் ஏற்படுத்துகின்ற காரணங்களால்தான் பெண்ணுரிமை இஸ்லாத்தில் பாதிக்கப்படுகிறது என்ற தவறான குரல்கள் ஆங்காங்கே எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தில் ஷரியத் சட்டமும், திருமறையும் சொன்ன கருத்துக்கள், அதன் வழி காட்டல்கள், அதனைத்தொடர்ந்து வழக்காடு மன்றங்களில் அவ்வப்போது வந்த தீர்ப்புகள் அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து தான், ‘ இந்திய நாட்டின் இறையாண்மையும் இஸ்லாமிய தனியார் சட்டமும்’ என்ற தலைப்பில் இந்நூலை எழுதி இருக்கிறேன். இதனை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதே என் அவா.
இவ்வாறு இதன் ஆசிரியர் உடன்குடி எம். முகமது யூசுப் அவர்கள் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
Be the first to rate this book.