1923ல் இந்து தீவிரவாதிகள் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அதன் பெயர் 'சுத்தி இயக்கம்' அதாவது தூய்மைப்படுத்தும் இயக்கம். எதை தூய்மைப்படுத்த..?
அன்றைய நாட்களில் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் கட்டாயபடுத்தி இந்த நாட்டு இந்துக்களை முஸ்லிம்களாக மாற்றி விட்டார்களாம்.
இவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றி அவர்களின் மாசகற்றித் தூய்மையானவர்களாக ஆக வேண்டுமாம்.
இதே கால கட்டத்தில் தான் சங்கரன் என்ற ஒற்றுமைப்படுத்தும் இயக்கம் என்று ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கம் இதே கொள்கையை வேறு வார்த்தைகளால் சொன்னது. இந்த இயக்கங்களைத் தலைமை ஏற்று நடத்தியவர்கள் சுவாமி சதானந்தா என்பவரும் பண்டிட் மதன்மோகன் மாளவியா என்பவரும் ஆவார்கள்.
இந்த இயக்கங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முஸ்லிம்கள் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையின்போது முகிழ்ந்தவை தாம் தன்சீம் பேரவையும், தப்லீக் பேரவையும்.
'இந்தி பிரச்சார சபை' என்றொரு சபையை ஆரம்பித்து அதன்மூலம் இந்தியை திணித்தார்கள். இந்தித் திணிப்புப் போதாதென்று உருது மொழியாகக் காட்டி அதனை அழிக்க அனேக திட்டங்களைத் தீட்டினார்கள்.
இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்த தங்கள் உருது மொழியை ஒழிக்கப்படுமுன் அதனை காப்பாற்றியாக வேண்டும். அதற்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் முஸ்லிம்கள். முடிவில் 'உருது அஞ்சுமன்கள்' ஆரம்பமாயின!
புத்தகத்திலிருந்து...
Be the first to rate this book.