மதவாதத்தை முறியடிப்பதற்காக நூலாசிரியர் முன்வைக்கின்ற யோசனைகள் உடனடியாக நடைமுறைப் -படுத்தப்பட வேண்டிய சத்தான யோசனைகள். மதச் சண்டைகளுக்குப் பெயர் பெற்ற அலீகர், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாய் இருக்கின்ற கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களின் சமூகச் சூழல்களை ஒப்பாய்வு செய்த சமூகவியல் வல்லுநரின் ஆய்வு முடிவுகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கின்ற வழிமுறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் விளித்து பத்து அம்சத் திட்டம் ஒன்றை நூலின் இறுதியில் தனி அத்தியாயமாகவே வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். முத்து முத்தாகத் தரப்பட்டுள்ள இந்தப் பத்தும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுமேயானால் முஸ்லிம்களையும் நாட்டையும் பீடித்துள்ள நெருக்கடிகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.
நூலாசிரியரான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நாடறிந்த அறிஞர். பன்னூல் ஆசிரியர். மாணவப் பருவத்திலிருந்தே இந்தியாவையும் இந்திய முஸ்லிம் சமூகத்தையும் நல்ல முறையில் அறிந்து தெளிந்தவர். பொறியியலில் படித்துத் தேர்ந்தாலும் மார்க்கத்திலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். தொலைநோக்கும் விஷயஞானமும் மிக்கவர். உலகமயமாக்கலின் கோர விளைவுகளைத் துல்லியமாகக் கணித்து எச்சரித்த சிந்தனையாளர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக இருக்கின்றார்.
Be the first to rate this book.