இந்தியக் கலைகளின் வரலாறு ஒரு விதத்தில் இந்திய அரசியல் மற்றும் பண்பாட்டின் வரலாறு. கலைகளின் வாழ்வும் அழிவும் அரசியல் அதிகாரங்களின் வெற்றியோடும் வீழ்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பண்பாடுகளுக்கு இடையே நடந்த பரிமாற்றங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன.
இந்த நூலாசிரியர்கள் இந்தியக் கலைகளின் பிரமாண்டமான வரைபடத்தை கடும் உழைப்பின் வழியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். கலை மரபுகளுக்கு இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகள், ஸ்தூபிகள், சிற்பிகள், குடைவரைக் கட்டுமானங்கள் எனப் பல்வேறு கலை வடிவங்களுக்குப் பின்னே இருக்கும் அழகியல் மற்றும் வரலாற்றுப் பின்புலம் பற்றிய விரிவான பதிவினை இந்த நூல் வழங்குகிறது.
இந்தியக் கலைமரபுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மிஞ்சியிருக்கும் நமது கலை அடையாளங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒரு பொது வாசகனுக்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல்.
Be the first to rate this book.