இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நூல். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள்.
மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நூல் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு சமுதாயப் பணியையும், எழுத்துப் பணியையும் செய்துள்ளது தெரிய வருகிறது.
அடுத்து கேரளாவில் பிறந்த இந்தியாவின் முதல் புனிதரான அல்போன்சா, திருவிதாங்கூரில் பிறந்த அருளாளர் தேவசகாயம் பிள்ளை, அல்பேனியா நாட்டில் பிறந்த அருளாளர் அன்னை தெரசா, ஆந்திர மாநிலத்தில் பிறந்த இறை ஊழியர் ஞானாம்மா என நூல் செல்கிறது.
ஒவ்வொரு மதத்திலும் இறை அருளாளர்கள் இறை தொண்டுடன் மக்கள் தொண்டும் புரிந்தே சிறக்கின்றனர். இயேசுவை மட்டுமே வணங்கினாலும், ஜாதி, மதம் பாராது மக்கள் தொண்டாற்றி, மக்களுக்காக வாழ்ந்து உயிர் விட்ட இந்த ஐந்து அருளாளர்களைப் பற்றி, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நுாலின் ஆங்காங்கே அருளாளர்களின் நிழற்படங்கள் அமைந்து நூலிற்கு வலுவூட்டுவனவாகத் திகழ்கின்றன.
Be the first to rate this book.