நவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி நிலையங்களில் மேற்கத்திய அறிதல் முறைகளின் அடிப்படையிலேதான் அறிவியலை அணுகவும் புரிந்துகொள்ளவும் சொல்லித்தரப்படுகிறது.
ஆனால் இந்திய அறிதல் முறைகளுக்கும் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கும் நீண்ட நெடிய தொடர்புகள் உள்ளன. இந்திய அறிதல் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நவீன அறிவியலின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளை வித்தியாசமான கோணங்களில் பார்க்கும் பார்வை நமக்கு ஏற்படும்.
இந்திய அறிதல் முறைகளை நமக்கு அறிமுகப்படுத்துவதிலும் இவற்றின் பின்னணியில் நவீன அறிவியல் புலங்களை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லித்தருவதிலும் நூலாசிரியர்கள் பெரும் வெற்றி அடைந்துள்ளனர்.
அறிவியலாளர்கள் மட்டுமல்ல, கலைஞர்களும், மாணவர்களும், தேடல் உள்ள ஒவ்வொருவருமே இந்த அறிதல் மரபுகள் மூலமாகப் பயன்பெற முடியும். அறிவியலை அறிதலில் நம் அறிதல் மரபுகள் துணையால் எந்த அளவு இனிமை பெற முடியுமோ அதே அளவு நம் பண்பாட்டை அறிந்துணரும் முயற்சியிலும் அறிவியலின் துணையால் ஆழமும் அழகும் பெற முடியும்.
வாருங்கள், அறிவியலை இசைக்கலாம்
Be the first to rate this book.