மலையாள மொழியில் வெளியான முதல் நாவலான 'இந்துலேகா', பல வகைகளிலும் தனிச்சிறப்புடையது. 1889-ல் இப்படைப்பு வெளியானது. 1890-ல் இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பயன்படுத்தப்படாத காரணத்தாலும், முரண்பட்ட பயன்பாட்டின் காரணத்தாலும் அதிவேகமாக நசிந்து கொண்டிருந்த மலையாள இலக்கியத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான சிறிய பங்களிப்பை நல்கும் ஆசையில் 'இந்துலேகா'வைப் படைத்ததாகக் கூறும் சந்து மேனோன், இந்த இலட்சியங்களை எட்டிப் பிடிக்கும் தரத்திலான கதையையும், தெளிவான நடையையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
மருமக்கத்தாய்க் கூட்டுக் குடும்பத்தின் பிரச்சினைகள், நாயர் குடும்பத்துப் பெண்களின் நிலை போன்றவற்றை அந்நாளைய சமூகப் பின்னணியில் சித்தரித்துள்ள சந்து மேனோன், பெண்கல்வியை, குறிப்பாக ஆங்கிலக் கல்வியை வலியுறுத்துகிறார். கேரளத்தில் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் இந்தக் குடும்ப-காதல் கதை, ஒருவகையில் சந்து மேனோனது சமகால இந்தியா முழுவதையும் பிரதிபலிக்க முனைகிறது.
. பெண்கல்வி, மலையாள மொழியை செழுமைப்படுத்தல் போன்ற திடமான நோக்கங்களுடன் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பு.
Be the first to rate this book.