“நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை அவர்கள் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) தேசிய வாழ்வில் இடம் பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்கள் எனில் அவர்கள் அந்நியர்களாக கருதப்படுவதை வேறெப்படியும் இருக்க முடியாது”. இவ்வாறு வெளிப்படையாக கோல்வால்கர் தனது நூலில் சிறுபான்மை மக்களை ‘அந்நியர்கள்’ என்று குறிப்பிட்டார். அந்த சித்தாந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி சிறுபான்மை மக்களை அந்நியர்களாக்கி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிட ஒன்றிய மோடி அரசு முயற்சித்து வருகிறது என்பதை உணர முடியும்.
Be the first to rate this book.