இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன.
பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.
Be the first to rate this book.