நான்கு விரிவான கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு இது இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை அறிவிப்பு, அதை இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சிகள் எதிர்கொண்ட விதங்கள், இரகசியமாக மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்கள், சிறைக் கொடுமைகள், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சுப்பிரமணிய சாமி போன்றோர் அதை எதிர்கொண்டவிதம் ஆகியன குறித்த ஒருவிரிவான ஆய்வு. சாதி, தீண்டாமை, வறுமை முதலான அடையாளங்களுடன் கூடிய இந்தியாவை ஒரு இலட்சிய நாடாக ஏற்றுக்கொண்டு, ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொண்டு ஹிட்லரின் பாசிசத்தை முழுமையாக ஏற்று அவனது மரணத்திற்குப் பின் அவனது பணியைத் தொடரவும் செய்தவருமான ஒரு வெள்ளைப் பெண் குறித்த ஒரு விரிவான கட்டுரை,
தமிழ்ப் பேராசான் சிவத்தம்பி அவர்களின் மரணத்தை ஒட்டி அவரது பங்களிப்புகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய ஒரு ஆய்வுக் கட்டுரை, ஒரு காலத்தில் பௌத்தத்திற்கு எதிரான கருத்துக்களுடன், சிங்கார வேலர் முதலானோரின் பௌத்த விளக்கக் கூட்டங்களில் வம்புகள் செய்த திரு.வி.கஅவர்கள் பின்னாளில் பௌத்தம் குறித்து ஆற்றிய ஒரு மிக முக்கியமான ஆய்வுரை இந்த நூலின் முத்தாய்ப்பாக அமைகிறது. இந்து மத நம்பிக்கைகளை முற்றிலும் ஏற்று ஒழுகிய அறிஞரான அவர். “இந்துமதத்தில் உள்ள நற்கூறுகள் எல்லாம் பௌத்தத்தின் கொடை” எனக் கூறுவதை நீங்கள் இந்த உரையில் காணலாம்.
Be the first to rate this book.