இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது..
‘துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை’ ‘உச்சிக்கூடுகட்டி உயிர்புரப்பாய்’ என்பதுபோன்ற வரிகளே கவிதையில் என்னைப்போன்ற ஒருவன் எதிர்பார்ப்பது……. அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் இருப்பது கவிஞரின் இத்தகைய சொற்சேர்க்கைகளில்தானே ஒழிய எளிமையான கருத்துக்களிலோ உணர்வுகளிலோ அல்ல.
வாழ்த்துக்கள். இத்தொகுதியில் எனக்கு உகக்காத ஒரு கவிதைகூட இல்லை என்பது உண்மையிலேயே திகைப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுகிறது
-எழுத்தாளர் ஜெயமோகன்
கவிதை இவருக்கு இயல்பாக வருகிறது. மொழிச்செறிவும் நுட்பமும் கவிதைகளில் உண்டு. சில பூடகப் பொருள் கொண்ட வரிகள் சிறப்பு. செயற்கைத்தனம் இல்லை. கல்பனா ஜெயகாந்துக்கு வாழ்த்துக்கள்.
- எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
உங்களுக்கு வார்த்தை வசப்பட்டுக் கொண்டிருக்கிறது. வண்ணப் பானை வயந்த குயவன் கவிதை நான் தேடும் வர்க்கத்தில் பட்டது. அவனோ, பயணியோ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்காதவரை பானை நிற்கும். உடைத்தால் தான் என்ன?
- எழுத்தாளர் இரா முருகன்
Be the first to rate this book.