உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன. இமயமலையின் அழகையும் குளிரையும் அனுபவிக்க உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இமயமலையின் பனியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவின் மிதமான தட்பவெப்ப நிலைக்கு இமயமலை மிக முக்கியக் காரணம்.
மலை ஏற்றம், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இங்குள்ளன.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இமயமலை வளர்ந்துகொண்டே இருக்கிறதாமே, நிஜமா? இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் கழித்து இமயமலை என்னவாகும்? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்னென்ன தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளன? எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தோர் யார் யார்? இன்னும் பல விறுவிறுப்பான தகவல்களைத் தருகிறது இந்நூல்.
Be the first to rate this book.