மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு அப்படி. அந்த இடத்தில் இருந்துதான், மலேசியாவில் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த அன்பர் ஒருவரை, தனது முற்பிறவி உறவின் மூலம் வரவைத்தார் யோகி ஒருவர். அவர் சுவாமி ராமா. மலேசியாவிலிருந்து வந்து சரண் புகுந்த அந்த அன்பர், மோகன் சுவாமி. எங்கோ இருந்த மோகன் சுவாமி, சுவாமி ராமாவைச் சந்தித்த பிறகு அவரின் நேரடி சிஷ்யரானதையும், அதன்பின் தனக்குள் நிகழ்ந்த அதிசயங்களையும், சுவாமி ராமாவுடனான தன் அற்புத அனுபவங்களையும் ஆங்கிலத்தில் நூலாக எழுதினார். அதன் தமிழாக்க நூல் இது. இந்த நூலில் மோகன் சுவாமி, தான் கண்டு அனுபவித்தவற்றை அப்படியே எழுதியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் பல சம்பவங்கள் நம்மை சிலிர்க்கவைக்கும். அப்பழுக்கற்ற ஆழ்ந்த நம்பிக்கை என்றைக்கும் பொய்க்காது என்பதைப் பல தளங்களில் பயணித்து விவரிக்கிறது இந்த நூல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள சுபாவின் எழுத்து நடை உங்களைப் பரவசப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.