இது ஒரு தூய மரம். பரிசுத்த விருட்சம். இதில் கனிகளும் சுகம் தரும் நிழலும் தோன்ற வேண்டும் என்றால் முதலில் இதில் பசுமையான கிளைகளும் இலைகளும் முளைக்க வேண்டும். வேர்களைக் கொண்டு மட்டுமே எந்த மரமும் தனக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதில்லை. தண்டுகளைப் பயன்படுத்தியும் இலைகளைப் பயன்படுத்தியும் தன்னுடைய உணவைப் பெற்றுக் கொள்கின்றது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், கிளைகளையும் தண்டுகளையும் இலைகளையும் வேர் உயிரோடு வைத்திருப்பது போல, கிளைகளும் தண்டுகளும் இலைகளும் மரத்தின் வேருக்கு உணவளித்து உதவுகின்றன என்றுதான் சொல்லியாக வேண்டும்.
அது போன்றே, இறைவனைப் பற்றிய பொதுவான அறிவு தன்னிடத்தில் என்னதான் சரியானதாக இருந்தாலும் அதனோடு தொடர்புடைய ஏனைய அம்சங்களும் நிரம்பி இருந்தால்தான் கிளைகளும் இலைகளும் கூடிய வேர்விட்ட மரமாக (அஸ்லுன் ஸாபித்துன்) அது திகழ முடியும்.
இப்படிப்பட்ட அறிவைப் பெற வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய சிந்தனையையும் தன்னுடைய இஜ்திஹாதையும் நம்பி இருந்தால் மட்டும் போதாது. மாறாக, இறைவனுடைய வேதத்தையும் இறைத்தூதருடைய ஸுன்னத்தையும் மட்டுமே சார்ந்து நின்றாக வேண்டும்.
Be the first to rate this book.