தமழில் நான்கு இமாம்களையும் பற்றி சிறப்பாக எழுதியவராக ஆர். பி. எம் கனியை கூறலாம். நான்கு இமாம்களையும் அவர்களின் வரலாற்றுச் சூழலில் வைத்து, அவர்களின் வாழ்வு மற்றும் பணிகளை இந்த பிரதி பேசினாலும் எல்லாவற்றையும் விட அந்த இமாம்களின் தனிப்பட்ட குணவியல்புகளை இதில் முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்பட்டுள்ளது.
எவ்வளவு மேன்மைமிக்க, சக மனிதனின் மீதான கரிசனை கொண்ட மனிதர்களாக இந்த இமாம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை வாசிக்கும் பொழுது உள்ளம் அதன் கடினத் தன்மையை நெகிழ்த்திக் கொண்டு கரைய முயல்கிறது. குறிப்பாக இமாம் அபூஹனிபா, மாலிக் போன்றவர்களின் அரசியல் வாழ்வு அதற்காக அவர்கள் அனுபவித்த இன்னல்களை வாசிக்கையிலும் புலமைத்துவ வாதிகளின் சமூக கடப்பாடு பற்றிய எண்ணங்களை அது கிளர்த்தாமல் இல்லை.
நான்கு பெரும் இமாம்களும் இந்த சமூகத்தில் அடைந்துள்ள மகத்தான கெளரவத்துக்கான காரணம் அவர்களது வியத்தகு அறிவாற்றல் மட்டுமல்ல, அதனையும் விஞ்சும் வகையில் அமைந்துள்ள அவர்களின் போற்றத் தக்க தன்னல மறுப்பும், பொது நலன் நோக்கிய அற உந்துதலுமே என்பதை ஆர். பி. எம் கனி சிறப்பாக இந்த நூலில் வெளிக் கொணர்ந்துள்ளார்.
இஸ்லாமிய சிந்தனை புலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழிலக்கிய மரபுக்கும் இதுவொரு பங்களிப்பு.
- லஃபீஸ் ஷஹீத்
Be the first to rate this book.