மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயண வேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடி நூல்கள் உபநிடதங்களும், கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது.
Be the first to rate this book.