விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2009 கோடையில் கொல்லப்பட்டார். இலங்கையில் நடந்த விடாப்பிடியான, சிக்கல் நிறைந்த போர் ரத்தமயமான முடிவுக்கு வந்தது. சுமார் 30 வருடங்களாக நடந்த போரின் கொடூரக் கரங்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தன் கோர நகத்தைப் பதித்திருக்கிறது. தேசம் முழுவதிலுமான பௌத்த மடாலயங்கள், மத்திய இலங்கையின் இனிமையான மலைப்பிரதேசங்கள், கிழக்கின் மட்டக்களப்பு திரிகோணமலைக் கடற்கரை, வெப்பம் மிகுந்த வடக்கு என அனைத்துப் பகுதிகளிலும் போரின் தடம் அழுந்தப் பதிந்திருக்கிறது. போரின் செய்நேர்த்தி மிகுந்த கொடூரத்திலிருந்து தப்பிய இடங்கள், மனிதர்கள் என்று எதுவுமே அங்கு இல்லை.
5
AnbuChelvan 18-04-2021 11:25 pm