எந்த நதியும் ஒரே மாதிரி ஓடுவதில்லை. எந்த எழுத்தாளனின் படைப்பும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமூகம் அவனை மாற்றிக்கொண்டே இருக்கும். தண்ணீரின் அளவு நதியின் ஆழத்தையும் அகலத்தையும் தீர்மானிக்கும்.
எழுத்தாளனின், ‘சமூகப் புரிதல்' அவன் எழுத்தின் குணத்தைத் தீர்மானிக்கும். மாணவப் பருவத்தில் எழுதத் தொடங்கி முதிர் நிலையிலும் எழுதிக் கொண்டிருக்கும் சிகரம் ச.செந்தில்நாதனின் பல கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு இது. இதில் அவரின் முகம் தெரியும். படிக்கும் உங்கள் முகமும் தெரியும். முகத்தில் முகம் பார்க்கலாம்.
Be the first to rate this book.