இந்தக் கலியுகத்தில், இறைவன் நம்முன் காட்சி அளித்து, பக்தா... என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடு!என்றுதான் கேட்கத் தோன்றும். வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில், இளமையும் அறிவும்தான் ஒரு மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய அளவுகோல்கள். சந்தோஷம் என்பது உதட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; மனத்தளவிலும் இருக்கவேண்டும். அதை வழங்குவதுதான் இளமை. அந்த வாழ்க்கைதான் இனிமை. இழந்த பணத்தைக்கூட திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது. இளமையும் அப்படிப்பட்டதுதான். இங்கே சொல்லக்கூடிய இளமை, வயதோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; மனதோடும் சம்பந்தப்பட்டது. அனுபவங்கள் சேரச் சேரத்தான் மனம் பக்குவப்படும். என்றென்றும் இளமையாக இருப்பது பற்றி எத்தனையோ வழிமுறைகளை சாஸ்திரங்கள் சொல்லி இருக்கின்றன.
Be the first to rate this book.