போலிகளையும் நகல்களையும் அறியாமையினால் தங்களின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டிருக்கும் இளைஞர்கள், தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தைவிட சுய நலனையும் இயக்க நலனை மாத்திரமே குறிக்கோளாக கொண்ட தலைவர்கள், குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தார்மீக அடிப்படையில் பயிற்சியளிப்பது எப்படி எனத் திகைக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இத்தகைய அபாயகரமான சூழலை மாற்றி இன்றைய - நாளைய பாலர் முதல் பதின்மர் வரை உள்ள வளரிளம் தலைமுறையைப் பாதுகாக்கும் பொறுப்பு அடிப்படையில் நல்லவர்கள்களான பெற்றோர்கள், கற்றோர்களுக்கு உண்டு. நேர்மறை மாற்றத்திற்கான இது போன்ற அதிகாரப்பூர்வ வரலாற்று நூல்கள் முதல் படி என நிச்சயம் நம்பலாம். வளரும் இளைய சமூகம் எப்படியாக தங்களை கட்டமைத்துக்கொள்ளுதல் சமுதாயத்திற்கு பயனளிக்கும் என்பதற்கு பாடமாக இளம் சஹாபாக்களின் செயல்பாடுகளும் அறிவும் ஆளுமையும் தியாகமும் பயிற்சி தந்துதவும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.