பா.செ.வின் எழுத்துகள் இப்படி ரத்தமும், சதையுமாக அடக்கப்பட்டவர்களின், கைவிடப்பட்டவர்களின், விளிம்பு நிலை மக்களின் ஆன்மாவை வெளிக்காட்டிக் கொண்டு நிற்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. ஒரு ஜெருசலேத்தின் சிறுவன் முதலாக அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் அவரையே உள்வாங்கிச் செரித்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் வாழ்ந்திருக்கிறார் அல்லது வாழ்ந்து பார்த்திருக்கிறார். அதனால்தான் அப்பாத்திரங்களின் உயிர்த்துடிப்பை நாம் இன்னமும், ஒவ்வொரு முறையும் படிக்கும்போதும் மீண்டும் மீண்டும் உய்த்துணரமுடிகிறது. இதுதான் பா.செ. வின் எழுத்துகளின் சிறப்பு என்றும் நாம் சுட்டமுடியும்.
Be the first to rate this book.