ஆய்வுலகில் முதல் முதலாகக் குறுந்தொகையில் மடலேறுதலும், நற்றிணையின் நெஞ்சோடு கிளைத்தலும், உளவியல் பார்வைக்கு உள்ளாக்குப் பெற்றுள்ளன. யுங்கின் உளப் பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றின் வஞ்சினம் மொழிதல் அலசப் பெற்றுள்ளது; உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கனவுக் கொள்கையுடன் இலக்கியக் கனவுகள் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் ஆளுமைப் பண்புகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஆல்ஃபிரட் அட்லர், கேரன் ஆர்ன், எரிக் எச். எரிக்கன் போன்ற உளவியல் அறிஞர்களின் கோட்பாடுகள் இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளன.
- பேராசிரியர் இரா.மோகன்
Be the first to rate this book.