இலக்கியக் கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருள். இது கடந்த இருபது ஆண்டுகளில் கலாசாரம், சமூகம் பற்றிய ஆய்வை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரிலக்கியப் போற்றுதலை ஊக்குவிப்பதைவிடக் கலாசார விளைபொருள்களான அரசியல், உளவியல் தொனிப் பொருள்கள் குறித்த சந்தேகத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மரபு, உண்மை ஆகியவற்றின் மீதான மரியாதையை கீழறுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறது. இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் ஜானதன் கல்லர் ‘கோட்பா’ட்டை விளக்குகிறார்; இதை அவர் ஒன்றோடொன்று பொருதும் ‘கருத்துக் குழுக்க’ளை விவரிப்பதன் மூலம் செய்வதில்லை. கோட்பாடு ஊக்குவித்துள்ள முக்கிய ‘அடியெடுப்புக’ளைச் சித்திரிப்பதன் மூலம் செய்கிறார். மேலும் இதை இலக்கியம், மனித அடையாளம், மொழியின் ஆற்றல் ஆகியவை பற்றி சிந்திப்பதற்கு உதவும் கோட்பாட்டின் தொனிப் பொருள்களைக் குறித்து நேரிடையாகப் பேசுவதன் மூலம் செய்கிறார். எதைப் பற்றி இத்தனை அமளி என்று ஆர்வம் கொண்டவருக்கோ இலக்கியத்தைப் பற்றி இன்று சிந்திக்க விரும்புபவருக்கோ இந்தத் தெளிவான அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.