இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப் பொறுப்பும் உள்ளன. இவ் விலக்கண அரசியல் பின்னணியில் இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களின் பிற சமூக விஞ்ஞானங்களோடுள்ள தொடர்பு பன்முக நோக்கில் அணுகப்பட வேண்டும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் பழைமைப்பற்றைக் கைவிட்டு யதார்த்த மொழி நிலையைப் பூதக்கண்ணாடிகொண்டு பார்க்கும் மனப்பாங்கு வளர வேண்டும்.
இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன்மீது சமுகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு ‘இலக்கணவியல்’ என்னும் ஓர் சமூக விஞ்ஞானத் துறைப் படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.