தமிழ் மொழி இலக்கணத்தை அறிய வேண்டும் என்றால் எங்கிருந்து தொடங்குவது ? பள்ளியில் படிக்கும் என் மகளுக்கு நல்ல தமிழ் இலக்கண நூல் ஒன்றைப் பரிந்துரைக்க முடியுமா ? இலக்கணத்தை எளிமையாகக் கற்பிக்கும் நூல் ஏதேனும் உண்டா ? எனக்குள்ள ஆர்வத்திற்கு உடனே நான் தமிழ் இலக்கணம் கற்க விரும்புகிறேன், கற்றுக் கொடுப்பீர்களா ? – இப்படி எண்ணற்ற வினாக்களை அன்றாடம் எதிர்கொள்கிறேன். தமிழ் இலக்கணத்தில் நாம் முதல் நிலையில் தெரிந்துகொள்ள வேண்டிய, மறக்கக்கூடாத ஒவ்வொன்றையும் நிரல்படுத்தி எழுதியிருக்கிறேன். மாணாக்கர்கட்கும் தமிழாசிரியர்கட்கும் தமிழ் இலக்கணத்தைக் கற்க விரும்புவோர்க்கும் மிகவும் பயன்படும். இது தொடக்கம்தான் ! ஆனால், வலிமையான தொடக்கம்.
Be the first to rate this book.