முனைவர் வீரவநல்லூர் சுந்தரம் ராஜம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்; 1963 முதல் 1975 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அமெரிக்கா சென்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் 1977இல் முதுகலைப் பட்டமும் 1981இல் முனைவர் பட்டமும் பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் இரண்டிலும் பல ஆண்டுகள் விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்க மாணவர்களுக்குப் பல நிலைகளில் தமிழ்மொழி பயிற்றுவித்துள்ளார். “A Reference Grammar of Classical Tamil Poetry: 150 B.C.-pre-fifth/sixth Century A.D.” - அவரது தலைசிறந்த படைப்பு.
முனைவர் ராஜம், பழம்பெரும் புலவர்களான பேராசிரியர் இலக்குவனார், உரைவேந்தர் துரைசாமிப்பிள்ளை, பேரா. தமிழண்ணல் போன்றோரின் மாணவி; பேரா. அ. கி. ராமானுஜன், பேரா. எமனௌ ஆகியோரின் பாராட்டைப் பெற்றவர்.
Be the first to rate this book.