தமிழில் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்தப் புதிய வடிவத்தில் எழுதும் நாற்பது வயதுக்கும் குறைந்த இளையவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறுள்ள தமிழ்க்கவிதையின் மிகப்பிந்திய பிரதிநிதித்துவம் இவை. கவிதைக்கலை முக்காலத்தையும் கூறும். இக்கவிதைகள் பழங்காலத்தமிழின் தொடர்ச்சியாகவும் எதிர்காலத் தமிழின் முன்னறிவிப்பாகவும் உள்ளன. இளையவர்களின் உள் உலகம் பற்றித் தெரிந்துகொள்ள இப்புத்தகம் மிகவும் பயன்படும். இவ்விளையவர்கள் பலர் எதிர்காலத் தமிழைத் தீர்மானிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். இவர்கள் 2 ஒவ்வொருவரின் கவிதையின் போக்குகள் குறித்தும் நூல்முன்னுரை பேசுகிறது. இவர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அவ்வகையில் இத்தொகுப்பு ஓர் அரிய இலக்கிய ஆவணமாகும். ஒவ்வொரு தமிழர்களும் இதிலுள்ளவற்றைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். இந்த நூல் எல்லோர் கையிலும் இருக்கவேண்டும்.
Be the first to rate this book.