இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான இளைய சமுதாயத்தை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா..? அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாயம் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை 'இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' என்ற இந்த நூலில் சொல்லி ஆற்றுப்படுத்தியிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா.
Be the first to rate this book.