தாகம், சோகம், ஏக்கம், மண், வயல், நிலம், மீனுகுட்டி, நதி, வீடு, பூக்காரி, பேருந்து, அம்மாவின் சமையல்… என எல்லாவற்றுக்கும் ஒரு ஜன்னலைச் செய்தவரின் வார்த்தைக் கம்பிகளின் வழியே பரந்து கிடக்கும் நகரத்தையும், நெஞ்சில் ஊஞ்சாலடிக் கொண்டிருக்கும் நினைவுகளையும் பார்த்து பார்த்து என்னவெல்லாமோ ஆயிற்று. இவர் கவிதைகளைப் பற்றிச் சொல்வதென்றால் எல்லாவற்றையும் பற்றிச் சொல்வது மாதிரிதான்.
கவிதை என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் இவர் எழுத்து செய்கிறது. ஊசியிலை நுனிகளில் மனதை வைத்து உருண்டு விழுந்து விடாமலிருக்க அழகு பார்க்கிறது. கனத்த தார் ரோட்டில் செருப்பின்றி நடப்பவரின் சூட்டைக் கடத்துகிறது.
ஒரு குறுகிய வீட்டில் நம்மை இருத்தி வைத்துப் பின் எழ வைத்து விரல்களுக்குச் சொடுக்கு எடுக்கிறது. வாசிப்பவரைக் கவிதை வழி கடத்திக் கவிதையாக்குகிறது. மனதைக் கவிதையாகச் செய்கிறது!!
- கனா காண்பவன்
Be the first to rate this book.