இன்றைய நாளில் நமது நாட்டு இளைஞர்கள் நன்கு படித்துத் தேறிய பின்னரும் தக்க பணி கிடைக்காது அல்லலுறுவதைக் காண்கிறோம். அதற்கு முக்கிய காரணம் தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, எந்தப் படிப்பில் பணி வாய்ப்புக்கள் உள்ளன என்று உணராமல் ஏதாவது படிக்க வேண்டும் என்று படிப்பதுதான். அதற்கு அவர்கள் மட்டுமின்றி அவர்கள் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்நூலில் பல்வேறு பணிகளின் தன்மை, அவற்றிற்குத் தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் திறன்கள், தேவையான கல்வியை கற்பிக்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்புக்கள் மற்றும் ஊதிய விவரங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
எனவே அவ்விவரங்களைப் படித்தால் தனக்கு ஏற்ற பணி என்ன, அதற்கேற்ற படிப் பென்ன, அதனை எங்கே படிக்கலாம் என்றுணர்ந்து இளைஞர்கள் படித்துப் பணிபுரிய உதவியாக இருக்கும்.
Be the first to rate this book.