ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர். உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை.
அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும். இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொருநாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.
ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் ‘ய கீக் இன் ஜப்பான்’, ‘இக்கிகய்’ ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ளன. ஜப்பானுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள ‘செர்ன்’ நிறுவனத்தில் ஒரு கணினிப் பொறியாளராக அவர் பணியாற்றினார்.
பிரான்செஸ்க் மிராஷெஸ், பல விருதுகளைப் பெற்றுள்ள, சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ளார். எப்படிச் சிறப்பாக வாழ்வது என்பது குறித்த நூல்களும் அவற்றில் அடக்கம். அதோடு, ‘லவ் இன் ஸ்மால் லெட்டர்ஸ்’, ‘வாபி&சாபி’ ஆகிய இரண்டு நெடுங்கதைகளும் அவற்றில் அடங்கும்.
1 Mokka book
Mokka book
Inigo 18-10-2022 11:37 pm