வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று _ தன்னை நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை. வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை... நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்துகள் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த நூல் மூலமாக ராஜபாட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விட்டல் வெங்கடேஷ் காமத். இது ஒரு சுயசரிதை. மும்பையிலும், இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 400 ரெஸ்டாரென்ட்டுகளையும், மூன்று மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் பலவும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் ஹோட்டல் அதிபரின் சொந்தக் கதை. மும்பை விமானநிலையத்துக்கு எதிரில் பிரமாண்டமாக எழும்பி நிற்கும் ‘தி ஆர்கிட்’ என்னும் எக்கோட்டலை நிறுவி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவரின் பிசினஸ் கதையும்கூட. தனது கதையை விட்டல் நேர்மையாகப் பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பு. அதாவது, எந்த சம்பவத்தையும் மறைக்காமல், எந்த நிகழ்வையும் மிகைப்படுத்தாமல் உள்ளது.
Be the first to rate this book.