நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாட்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீது வெறுப்பும் பகையும் வளர்ந்து. மேலும் அவர்களுக்கு நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்புகளிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர்களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.