வசீலி சுகம்லீன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ ஒரு கல்விசார் செவ்வியல் படைப்பு. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
***
உக்ரேனின் கிராமப்புறத்தில், முப்பத்தொரு மாணவர்களின் முன்பள்ளி ஆண்டிலும் அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தொடக்கப் பள்ளி கற்றலின் போதும் வசீலி சுகம்லீன்ஸ்கி மேற்கொண்ட புதுமையான கற்பித்தல் பணியை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ அதன் காலத்தைவிடப் பல ஆண்டுகள் முன்னதாக இருந்தது: இயற்கையுடனான நமது உறவு, சூழ்நிலைகளிடம் வெளிப்படுகின்ற வெகுசன ஊடகங்களின் தாக்கங்களை எதிர்கொண்டு குழந்தைகளின் ஆன்மாக்களை எவ்வாறு வளர்ப்பது, பிறரிடம் இரக்கத்தை வளர்க்க குழந்தைகளுக்கு உதவும் விதம், குடும்பங்களுடன் பள்ளிகள் எவ்வாறு வலுவான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளின் மூளைகள் எப்படிச் செயல்படுகிறது போன்றவற்றிலுள்ள சிக்கல்களை விவரிக்கிறது.
கற்றலுக்கான தன்னியல்பான விருப்பத்தை எவ்வாறு தூண்டுவது, எழுத்தறிவிலும் எண்ணறிவிலும் திறன்களைப் பெறச் சிரமப்படுகின்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் முறை போன்ற பல விசயங்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.
சுகம்லீன்ஸ்கியின் எழுத்துகள் தொடர்ந்து புகழ்பெற்று வருகின்றன. குறிப்பாக, சீனாவில் மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றன. ஆசிரியர்களும் பள்ளி முதல்வர்களும் இளம் குழந்தைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம்.
***
திறந்த மனதுடன் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்னும் உண்மையான விருப்புடன் வருகிறார்கள். ஒரு சோம்பேறியாகவோ, வாய்ப்பில்லாதவர்களாக பிறர் அவர்களைப் பார்க்க முடியும் என்கிற சிந்தனையே குழந்தைகளைப் பயமுறுத்துகிறது.
- வசீலி சுகம்லீன்ஸ்கி
Be the first to rate this book.