இதயத்தின் நலனுக்கு புகை, மது, சுற்றுப்புறச் சீர்கேடு என்று பல எதிரிகள் இருந்தாலும் உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புதான் பிரதான வில்லனாக இருக்கிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு தேவையான அளவு உடலில் சேரும் வகையில், உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முடிவதோடு, மரண அபாயத்தில் இருந்து தப்பிக்கவும் முடியும் என்கிறது இந்தப் புத்தகம். மேலும்,
கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
இதயத்துக்கு நல்ல உணவு எது? கெட்ட உணவு எது?
பால் பொருள்களால் இதயத்துக்குப் பாதகமா சாதகமா?
அசைவ உணவுகள் இதயத்துக்கு ஏற்றவையா?.
போன்றவை உள்பட, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உணவு முறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். இதயத்தைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவுகளின் செய்முறை விளக்கமும் இதில் அடங்கியுள்ளது.
Be the first to rate this book.