சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும் ஒரு வகையில் சரித்திரமாகத் தோன்றுகிறது; எழுதப்படாத எளிய மக்களின் சரித்திரம். நாவலில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் நிலையில் மாற்றம் இல்லாமல் வாழும் மக்களின் சரித்திரம்.
Be the first to rate this book.