சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும் ஒரு வகையில் சரித்திரமாகத் தோன்றுகிறது; எழுதப்படாத எளிய மக்களின் சரித்திரம். நாவலில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் நிலையில் மாற்றம் இல்லாமல் வாழும் மக்களின் சரித்திரம்.
5 நீதி வேண்டுவது - இடக்கை
இடக்கை.. தலைப்பிற்கான விளக்கங்களோடு படிக்கையில் இன்னும் ரசனை கூட்டும் சிறந்த நாவல்.. நீதி வேண்டுவது , இதனைச் சுற்றிய போராட்டங்களை அருமையாக கதைப்படுத்தியுள்ளார். முதல் வாசிப்பிலேயே பிரமிக்க வைக்கவில்லை ஆனால் பிறகு சுவராஸ்யம் அதிகம்.. நன்றி..
Ranjith Samraj 22-08-2020 03:20 pm