நவீன செவ்வியல் நாவல் என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது 'இடைவெளி'தான். பரந்து விரிந்த பிரமாண்டமான தளம் இல்லையென்றாலும் சிறிய ஆனால் அடர்த்தியும் ஆழமும் நுட்பமும் கூடிய நவீன படைப்பு. படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக்கொடுத்து, அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீன படைப்பாளி சம்பத்.
***
தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதன் பரவசத்தையும்தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.
- சி. மோகன்
Be the first to rate this book.