கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது. பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது. நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது. அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.
Be the first to rate this book.