வாழும் காலத்தில் பயணம் செய்பவர்களை நாம் அறிவோம். ஆனால் பயணம் செய்வதற்காகவே வாழ்ந்தவர் இப்ன் பதூதா. இன்று நாம் மேற்கொள்ளும் பயணங்களைப் போன்றதல்ல இப்ன் பதூதாவின் பயணங்கள். கால் கடுக்க நடக்க வேண்டும். பாலைவனங்களைக் கடக்கவேண்டும். கடலில் மிதக்க வேண்டும். எங்கும் ஆபத்து, எதிலும் ஆபத்து.
ஓர் ஆராய்ச்சியாளருக்கு இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் இப்ன் பதூதாவிடம் இருந்தது. தேடல், புதிய பிரதேங்களை, புதிய மனிதர்களைச் சந்திக்கும் ஆர்வம். கூடுதலாக, உள்ளம் முழுக்க உறுதி. மெக்காவுக்கும் மதீனாவுக்கும் புனிதப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் துருக்கி, இந்தியா, சீனா என்று சுற்றி வந்தார். பல அரிய தகவல்களை மிகக் கவனமாகக் குறிப்பெடுத்தார். தனது அனுபவங்களை ரசித்து ரசித்து எழுதி வைத்தார். உலகின் தலைசிறந்த பயணிகள் என்று ஒரு சிலரைத்தான் நம்மால் சொல்லமுடியும். இப்ன் பதூதா அவர்களுள் ஒருவர்.
Be the first to rate this book.