நெல்லை கவிநேசன் எழுதிய ‘நீங்களும் கலெக்டர் ஆகலாம்’ என்னும் தொடர் 2000ஆம் ஆண்டு தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து, ‘ஐ.ஏ.எஸ்.கனவல்ல நிஜம்’ என்னும் தொடர் சுமார் 194 வாரங்கள் (3 ஆண்டுகள்,9 மாதங்கள்)தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளிவந்தது.பின்னர்,கனவல்ல நிஜம் என்னும் கட்டுரைத்தொடர் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வெளிவந்தன.அவற்றுள் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வின் (Civil Services Examination) முதல்தாள் தேர்வை (Paper-I) எழுத உதவும்வகையில் வடிவமைக்கப்பட்ட புத்தகம் “ஐ.ஏ.எஸ்.பொதுஅறிவு கேள்விகள் -பதில்கள்” என்னும் நூல் ஆகும்.
இந்நூலில், சிவில் சர்வீசஸ் தேர்வுபற்றி விளக்கம்,இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலகப் புவியியல்,இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்கால நிகழ்வுகள், பொது அறிவியல் போன்ற தலைப்புகளில் முக்கியத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியப் பொதுஅறிவு கேள்விகளை தொகுத்து 27 பயிற்சி வினா தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி வினா தொகுப்புகள் சிவில் சர்வீசஸ் தேர்வை சிறப்பான முறையில் எழுத நிச்சயம் உதவும்.
Be the first to rate this book.