ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உருவாகும் எல்லைகளை கடந்த நேசத்தை ப் பற்றி எழுதியிருக்கிறார். இதை இனக்கவர்ச்சி,காதல், காமம் போன்ற வெகுஜன வார்த்தைகளுக்குள் அடக்கி விட முடியாதபடிக்கு அதையும் தாண்டிய நுண்ணிய உணர்வாக பதிந்திருக்கிறார்.
வாழ்வின் பல தளங்களை பக்குவமாக கடந்த வெகு சில மனிதர்களால் மட்டுமே இதன் நுட்பத்தை, எல்லைகளுக்குள் வரையறை செய்யப்பட முடியாத உயர்புரிதலை, உடல் தாண்டிய நேயத்தை, இந்த உயிரின் தீராத தேடலை புரிந்து கொள்ள முடியும்.படைக்கப்பட்ட எல்லோரும் தன் இன்னொரு பாதி ஆன்மாவை தேடும் தேடல் அது! ஒரு ஆன்மா தன் இருத்தலின் அழகை உணரும் இடம் அது ...அதை கண்டடைந்தவனே முழுமையடைகிறான். உலகத்தார் உருவாக்கிய அத்தனை எல்லைகளையும் தாண்டிய தளம்.
அப்படி யாரோ ஒருவரிடம் நாம் கொள்ளும் நேயம், ,நம்மை நிறைத்து பொங்கி பிரவகிக்க செய்து விடுகிறது.பெரும் விழிப்புடன் இருக்கும் மனிதன் இந்த நிறைவை உணர்ந்த நொடி இந்த பிறவிப் பெருங்கடலை கடந்தவனாகி விடுகிறான். அங்கு ஆணும் இல்லை.பெண்ணும் இல்லை.எல்லாம் கடந்த பேரன்பு மட்டுமே நிறைந்திருக்கும்.
- மீரா
Be the first to rate this book.